மேனகா; கோடி வீட்டுக் குப்பம்மா
கோழி எச்சம் நாறுதே
ஆடு மாடு சாணமும்
இப்படி இறைந்து கிடக்குதே
குப்பம்மா; மாடி வீட்டு மேனகா
மாடும் ஆடும் உசுருதான்
'போடி'கோழிக் குஞ்சுகள்
பொழுது முழுதும் மகிழ்வுதான்
மேனகா; வீட்டில் அறைகள் இல்லையே
விளக்கும் கூட இல்லையே
ஆட்டை மாட்டைக் கட்டியே
அசிங்கம் பண்ணல் நியாயமா?
குப்பம்மா; அறைகள் தேவை இல்லையே
அன்பு ஒன்றேப் போதுமே
கூரை வீட்டில் வாழ்ந்தாலும்
கூடி வாழ்தல் நன்மையே
Sunday, January 3, 2010
Subscribe to:
Comments (Atom)
குயிலே குயிலே நீ பாடு
குயிலே குயிலே நீ பாடு குரலோ தேன்சுவைநீ பாடு குருவி குருவி நீயாடு குதித்து குதித்து விளையாடு அணிலே அணிலேநீ ஏறு அழகாய் தாவிவிளையாடு ஆட்டுக் ...
-
ஏரைக் கொண்டு நிலம் உழுவான் எல்லோ ருக்கும் உணவ ளிப்பான் பாரை உயர்த்த உழைத்திடுவான் பட்டினி யின்றிக் காத்திடுவான் காலைக் கருக்கலில் எழுந்...
-
சீன நாட்டின் கடற்கரை சிவப்புக் கம்பளக் கடற்கரை பன்சின் நகரக் கழிமுகம் படர்ந்த அழகுக் கடற்கரை வசந்த காலம் வந்ததும் வளரும் பச்சை பாசிகள...
-
அம்மா அம்மா ஏன் அம்மா அழகிய முகத்தில் முககவசம் அத்தை மாமா வந்தாலும் அருகில் இருக்க முடியவில்லை? சும்மா இல்லை சுடர்கொடியேே சூழல் அழிந்...