கடகடவென்றே உருண்டு ஓடும்
கட்டை மாட்டு வண்டி-இது
காளை மாட்டு வண்டி
தடதடவென்றே உருண்டு ஓடும்
தமிழர் மாட்டு வண்டி-இது
தாவும் மாட்டு வண்டி
இலாடம் பூட்டிய காளை இழுக்கும்
இரட்டை மாட்டு வண்டி-இது
விரட்ட பறக்கும் வண்டி
மரச் சக்கரம் இரும்பைப் போர்த்தி
மாடு இழுக்கும் வண்டி- இது
காடும் கடக்கும் வண்டி
நுகத்தடிப் பூட்ட நோஞ்சான் மாடும்
நொண்டி இழுக்கும் வண்டி- இது
சண்டி மாட்டு வண்டி
Saturday, February 4, 2012
Thursday, January 26, 2012
பொங்கல்
புதுப்பானை வைத்திடுவோம் பொங்கலோ பொங்கல்
புத்தரிசி இட்டிடுவோம் பொங்கலோ பொங்கல்
கதிரவனை வணங்கிடுவோம் பொங்கலோ பொங்கல்
களித்து நாங்கள் மகிழ்ந்திடுவோம் பொங்கலோ பொங்கல்
மாடுகளை மதித்திடுவோம் பொங்கலோ பொங்கல்
மாக்கோலம் போட்டிடுவோம் பொங்கலோ பொங்கல்
பாடுபட்ட உழவர்களைப் பொங்கலோ பொங்கல்
பாராட்டி வாழ்த்திடுவோம் பொங்கலோ பொங்கல்
பெரியோரை வணங்கிடுவோம் பொங்கலோ பொங்கல்
பெற்றிடுவோம் ஆசிகளை பொங்கலோ பொங்கல்
வறியோர்க்கு வழங்கிடுவோம் பொங்கலோ பொங்கல்
வயல்வெளியை தொழுதிடுவோம் பொங்கலோ பொங்கல்
கரும்புண்டு களித்திடுவோம் பொங்கலோ பொங்கல்
கவலையின்றி கூடிடுவோம் பொங்கலோ பொங்கல்
பிரிவினைகள் இல்லாமல் பொங்கலோ பொங்கல்
பிறர்மகிழ சேர்ந்திடுவோம் பொங்கலோ பொங்கல்
புத்தரிசி இட்டிடுவோம் பொங்கலோ பொங்கல்
கதிரவனை வணங்கிடுவோம் பொங்கலோ பொங்கல்
களித்து நாங்கள் மகிழ்ந்திடுவோம் பொங்கலோ பொங்கல்
மாடுகளை மதித்திடுவோம் பொங்கலோ பொங்கல்
மாக்கோலம் போட்டிடுவோம் பொங்கலோ பொங்கல்
பாடுபட்ட உழவர்களைப் பொங்கலோ பொங்கல்
பாராட்டி வாழ்த்திடுவோம் பொங்கலோ பொங்கல்
பெரியோரை வணங்கிடுவோம் பொங்கலோ பொங்கல்
பெற்றிடுவோம் ஆசிகளை பொங்கலோ பொங்கல்
வறியோர்க்கு வழங்கிடுவோம் பொங்கலோ பொங்கல்
வயல்வெளியை தொழுதிடுவோம் பொங்கலோ பொங்கல்
கரும்புண்டு களித்திடுவோம் பொங்கலோ பொங்கல்
கவலையின்றி கூடிடுவோம் பொங்கலோ பொங்கல்
பிரிவினைகள் இல்லாமல் பொங்கலோ பொங்கல்
பிறர்மகிழ சேர்ந்திடுவோம் பொங்கலோ பொங்கல்
Sunday, January 22, 2012
கடை
புளியமர நிழலிலே
பூரணிப் பாட்டிக் கடையிலே
இட்டிலி வடையும் விற்கிறார்
இன்பமாய் வாங்கி உண்ணலாம்
எண்ணெய் அதிகம் இல்லாமல்
எந்த சாயமும் சேர்க்காமல்
மண்ணைச் சார்ந்த உணவுகள்
மணக்க மணக்கக் கிடைக்குமே
பயறு கிழங்கு அவித்தவை
பழங்கள் பலவும் அரியவை
வயிறு நிரம்ப உண்ணலாம்
வாராது நோய்கள் திண்ணமாம்
ஆவியல் வெந்த கொழுக்கட்டை
அரிசிமாவுப் புட்டுவகை
அனைவரும் உண்டு மகிழலாம்
அன்பாய் பாட்டியை வணங்கலாம்
பூரணிப் பாட்டிக் கடையிலே
இட்டிலி வடையும் விற்கிறார்
இன்பமாய் வாங்கி உண்ணலாம்
எண்ணெய் அதிகம் இல்லாமல்
எந்த சாயமும் சேர்க்காமல்
மண்ணைச் சார்ந்த உணவுகள்
மணக்க மணக்கக் கிடைக்குமே
பயறு கிழங்கு அவித்தவை
பழங்கள் பலவும் அரியவை
வயிறு நிரம்ப உண்ணலாம்
வாராது நோய்கள் திண்ணமாம்
ஆவியல் வெந்த கொழுக்கட்டை
அரிசிமாவுப் புட்டுவகை
அனைவரும் உண்டு மகிழலாம்
அன்பாய் பாட்டியை வணங்கலாம்
Friday, January 20, 2012
சூறாவளி
சுத்திச் சுத்திக் காத்தடிக்குது
சூறா வளிக் காத்தடிக்குது
கத்திக் கத்திக் காக்கைகளும்
கண்ட திசையில் கண்மறையுது
தென்னை மரங்கள் நாணலைப்போல்
தேகம் வலைந்து ஒடியுது
பண்ணை வயலின் நெற்கதிர்கள்
பாய்ந்து தூரம் பறக்குது
ஓலைக் குடிசை காலியாகுது
ஓட்டு வீடும் ஓட்டையாகுது
ஆல மரமும் அடிசாயுது
ஆக மக்கள் அலைபாயுது
படகும் பறந்து கரையேகுது
பலா வாழை மரம் சாயுது
விடாது புயலும் விரட்டுது
விழிப்பாய் இருப்பது நல்லது.
சூறா வளிக் காத்தடிக்குது
கத்திக் கத்திக் காக்கைகளும்
கண்ட திசையில் கண்மறையுது
தென்னை மரங்கள் நாணலைப்போல்
தேகம் வலைந்து ஒடியுது
பண்ணை வயலின் நெற்கதிர்கள்
பாய்ந்து தூரம் பறக்குது
ஓலைக் குடிசை காலியாகுது
ஓட்டு வீடும் ஓட்டையாகுது
ஆல மரமும் அடிசாயுது
ஆக மக்கள் அலைபாயுது
படகும் பறந்து கரையேகுது
பலா வாழை மரம் சாயுது
விடாது புயலும் விரட்டுது
விழிப்பாய் இருப்பது நல்லது.
Tuesday, January 17, 2012
யாழினி
அம்மா அப்பா சொல்கேட்டு
அழகாய் பள்ளிச் சென்றிடுவேன்
சும்மா சோம்பிக் குந்தாமல்
சுறுசுறுப் பாக ஆடிடுவேன்
நாளும் குறளைப் படித்திடுவேன்
நாட்டு நடப்புகள் அறிந்திடுவேன்
கேளிர் சேர்ந்தே வாழ்ந்திடுவேன்
கேள்விகள் கேட்டே தெளிந்திடுவேன்
கூண்டுக் கிளியாய் இல்லாமல்
குவலயம் சுற்றி வந்திடுவேன்
ஈன்ற தாயை வணங்கிடுவேன்
என்றும் தந்தை மதித்திடுவேன்
பாட்டும் கூத்தும் கற்றிடுவேன்
பழந்தமிழ் கலைகள் காத்திடுவேன்
வாட்டும் வறுமை சூழ்ந்தாலும்
வாழ்வில் நேர்மை கடைபிடிப்பேன்
அழகாய் பள்ளிச் சென்றிடுவேன்
சும்மா சோம்பிக் குந்தாமல்
சுறுசுறுப் பாக ஆடிடுவேன்
நாளும் குறளைப் படித்திடுவேன்
நாட்டு நடப்புகள் அறிந்திடுவேன்
கேளிர் சேர்ந்தே வாழ்ந்திடுவேன்
கேள்விகள் கேட்டே தெளிந்திடுவேன்
கூண்டுக் கிளியாய் இல்லாமல்
குவலயம் சுற்றி வந்திடுவேன்
ஈன்ற தாயை வணங்கிடுவேன்
என்றும் தந்தை மதித்திடுவேன்
பாட்டும் கூத்தும் கற்றிடுவேன்
பழந்தமிழ் கலைகள் காத்திடுவேன்
வாட்டும் வறுமை சூழ்ந்தாலும்
வாழ்வில் நேர்மை கடைபிடிப்பேன்
Saturday, January 14, 2012
உழவன்
ஏரைக் கொண்டு நிலம் உழுவான்
எல்லோ ருக்கும் உணவ ளிப்பான்
பாரை உயர்த்த உழைத்திடுவான்
பட்டினி யின்றிக் காத்திடுவான்
காலைக் கருக்கலில் எழுந்திடுவான்
கலப்பை தோளில் சுமந்திடுவான்
ஓலைக் குடிசையில் வாழ்ந்தாலும்
ஓயாமல் உழைப்பை ஈந்திடுவான்
கால்நடைக் காத்து மகிழ்ந்திடுவான்
கவலை மறந்தே வாழ்ந்திடுவான்
தோல் கருப்பாக இருந்தாலும்
தூய உள்ளம் பெற்றிருப்பான்
உழவர் உழைப்பை மதித்திடுவோம்
உண்மை அன்பால் வாழ்த்திடுவோம்
மழையைப் போலே பலன்கருதா
மான்பைப் போற்றி வணங்கிடுவோம்.
எல்லோ ருக்கும் உணவ ளிப்பான்
பாரை உயர்த்த உழைத்திடுவான்
பட்டினி யின்றிக் காத்திடுவான்
காலைக் கருக்கலில் எழுந்திடுவான்
கலப்பை தோளில் சுமந்திடுவான்
ஓலைக் குடிசையில் வாழ்ந்தாலும்
ஓயாமல் உழைப்பை ஈந்திடுவான்
கால்நடைக் காத்து மகிழ்ந்திடுவான்
கவலை மறந்தே வாழ்ந்திடுவான்
தோல் கருப்பாக இருந்தாலும்
தூய உள்ளம் பெற்றிருப்பான்
உழவர் உழைப்பை மதித்திடுவோம்
உண்மை அன்பால் வாழ்த்திடுவோம்
மழையைப் போலே பலன்கருதா
மான்பைப் போற்றி வணங்கிடுவோம்.
Thursday, January 12, 2012
மண் பானை
குயவர் செய்த பானை
குளிர்ச்சி யான பானை
வயலின் சேற்றில் மணலை
கலந்து செய்த பானை
தண்ணீர் பிடித்து வைக்க
தமிழர் செய்த பானை
மண்ணின் கொடையாம் பானை
மக்கள் விரும்பும் பானை
இடுப்பில் பானை வைத்தே
இளைய பெண்டிர் போவார்
குடிப்பதற்கு தண்ணீர்
கொண்டு வந்தே சேர்ப்பார்
பானைத் தண்ணீர் குடித்தால்
பக்க விளைவே இல்லை
தேனைப் போன்ற நீரை
தினமும் குடித்து மகிழ்வோம்
குளிர்ச்சி யான பானை
வயலின் சேற்றில் மணலை
கலந்து செய்த பானை
தண்ணீர் பிடித்து வைக்க
தமிழர் செய்த பானை
மண்ணின் கொடையாம் பானை
மக்கள் விரும்பும் பானை
இடுப்பில் பானை வைத்தே
இளைய பெண்டிர் போவார்
குடிப்பதற்கு தண்ணீர்
கொண்டு வந்தே சேர்ப்பார்
பானைத் தண்ணீர் குடித்தால்
பக்க விளைவே இல்லை
தேனைப் போன்ற நீரை
தினமும் குடித்து மகிழ்வோம்
Wednesday, January 11, 2012
பள்ளிக்கூடம்
நண்பர்கள் தோளில் கைபோட்டு
நானும் பள்ளிக்குச் சென்றிடுவேன்
நன்றாய் நானும் படித்திடுவேன்
நல்ல பேரை எடுத்திடுவேன்
சொல்லிக் கொடுக்கும் பாடங்களை
தொல்லை யில்லாமல் கேட்டிடுவேன்
மல்லிகைப் பூவின் மணம் போலே
மகிழ்ச்சி யாக ஏற்றிடுவேன்
படிக்காத பிள்ளைகள் படும்பாட்டை
பார்த்து நானும் படித்திடுவேன்
படித்து நானும் அறிவாலே
பலவுயர் தகுதிகள் அடைந்திடுவேன்
என்றன் வயதுப் பிள்ளைகளே
என்னோடு பள்ளிக்கு வாருங்கள்
நன்றாய் கல்விக் கற்றே நாம்
நாட்டை உயர்த்த உழைத்திடுவோம்
நானும் பள்ளிக்குச் சென்றிடுவேன்
நன்றாய் நானும் படித்திடுவேன்
நல்ல பேரை எடுத்திடுவேன்
சொல்லிக் கொடுக்கும் பாடங்களை
தொல்லை யில்லாமல் கேட்டிடுவேன்
மல்லிகைப் பூவின் மணம் போலே
மகிழ்ச்சி யாக ஏற்றிடுவேன்
படிக்காத பிள்ளைகள் படும்பாட்டை
பார்த்து நானும் படித்திடுவேன்
படித்து நானும் அறிவாலே
பலவுயர் தகுதிகள் அடைந்திடுவேன்
என்றன் வயதுப் பிள்ளைகளே
என்னோடு பள்ளிக்கு வாருங்கள்
நன்றாய் கல்விக் கற்றே நாம்
நாட்டை உயர்த்த உழைத்திடுவோம்
Monday, January 9, 2012
தமிழ்ப் பேசு
பாப்பா பாப்பா தமிழ்ப் பேசு
பச்சைக் கிளியைப் போல் பேசு
தம்பித் தம்பித் தமிழ்ப் பேசு
தாய் மொழி தானே நீ பேசு
அம்மா அப்பா எனச் சொல்லு
ஆங்கிலம் வேண்டாம் அயற்சொல்லு
மாமா அத்தை எனச் சொல்லு
மகிழ்ச்சி யாலே நீத் துள்ளு
வணக்கம் நன்றி எனச் சொல்லு
வாழ்வாய் தமிழ்போல் நீவென்று
இனிப் பென்றால்தான் நெஞ்சினிக்கும்
சிரிப் பென்றால்தான் களிப்பிருக்கும்
பனி யென்றால்தான் குளிரடிக்கும்
பாலென்றால் தான் பசிமறையும்
இனியும் இதைநீ மறவாதே
இனிய தமிழில் நீபேசு
பச்சைக் கிளியைப் போல் பேசு
தம்பித் தம்பித் தமிழ்ப் பேசு
தாய் மொழி தானே நீ பேசு
அம்மா அப்பா எனச் சொல்லு
ஆங்கிலம் வேண்டாம் அயற்சொல்லு
மாமா அத்தை எனச் சொல்லு
மகிழ்ச்சி யாலே நீத் துள்ளு
வணக்கம் நன்றி எனச் சொல்லு
வாழ்வாய் தமிழ்போல் நீவென்று
இனிப் பென்றால்தான் நெஞ்சினிக்கும்
சிரிப் பென்றால்தான் களிப்பிருக்கும்
பனி யென்றால்தான் குளிரடிக்கும்
பாலென்றால் தான் பசிமறையும்
இனியும் இதைநீ மறவாதே
இனிய தமிழில் நீபேசு
Sunday, January 8, 2012
ஆலமரம்
அடி பெருத்த ஆலமரம்
அழகு விழுது ஆலமரம்
கிளை படர்ந்த ஆலமரம்
கிளிகள் கொஞ்சும் ஆலமரம்
சிறிய விதையில் பிறந்த மரம்
பெருமரமாய் வளர்ந்த மரம்
சிறுவர் ஆட நிழல் தரும்
பெரியோர் கூட இடம் தரும்
விழுதில் ஊஞ்சல் ஆடலாம்
விளையாடி நாளும் மகிழலாம்
இலையில் சோறு உண்ணலாம்
இயற்கை அழகை பருகலாம்
ஊரில் உள்ளோர் கூடும் மரம்
உழைப்பவர் ஓய்வு எடுக்கும் மரம்
பாரில் பசுமை ஆலமரம்
பாலர் போற்றிப் பாடுவோம்
அழகு விழுது ஆலமரம்
கிளை படர்ந்த ஆலமரம்
கிளிகள் கொஞ்சும் ஆலமரம்
சிறிய விதையில் பிறந்த மரம்
பெருமரமாய் வளர்ந்த மரம்
சிறுவர் ஆட நிழல் தரும்
பெரியோர் கூட இடம் தரும்
விழுதில் ஊஞ்சல் ஆடலாம்
விளையாடி நாளும் மகிழலாம்
இலையில் சோறு உண்ணலாம்
இயற்கை அழகை பருகலாம்
ஊரில் உள்ளோர் கூடும் மரம்
உழைப்பவர் ஓய்வு எடுக்கும் மரம்
பாரில் பசுமை ஆலமரம்
பாலர் போற்றிப் பாடுவோம்
Saturday, January 7, 2012
பாட்டு
அம்மா பாடும் பாட்டு
அழகான தாலாட்டு
அப்பா பாடும் பாட்டு
அறிவை வளர்க்கும் பாட்டு
அண்ணன் பாடும் பாட்டு
அச்சம் ஓட்டும் பாட்டு
அக்கா பாடும் பாட்டு
அன்பை கூட்டும் பாட்டு
தம்பி பாடும் பாட்டு
தமிழ் வெல்லப் பாட்டு
தங்கைப் பாடும் பாட்டு
தெங்கின் இனிமை பாட்டு
ஒன்றாய் சேர்ந்துப் பாடுவோம்
நன்றாய் சிரித்து ஆடுவோம்
கன்றாய் களித்து ஓடுவோம்
கவலை மறந்து கூடுவோம்
அழகான தாலாட்டு
அப்பா பாடும் பாட்டு
அறிவை வளர்க்கும் பாட்டு
அண்ணன் பாடும் பாட்டு
அச்சம் ஓட்டும் பாட்டு
அக்கா பாடும் பாட்டு
அன்பை கூட்டும் பாட்டு
தம்பி பாடும் பாட்டு
தமிழ் வெல்லப் பாட்டு
தங்கைப் பாடும் பாட்டு
தெங்கின் இனிமை பாட்டு
ஒன்றாய் சேர்ந்துப் பாடுவோம்
நன்றாய் சிரித்து ஆடுவோம்
கன்றாய் களித்து ஓடுவோம்
கவலை மறந்து கூடுவோம்
Subscribe to:
Comments (Atom)
குயிலே குயிலே நீ பாடு
குயிலே குயிலே நீ பாடு குரலோ தேன்சுவைநீ பாடு குருவி குருவி நீயாடு குதித்து குதித்து விளையாடு அணிலே அணிலேநீ ஏறு அழகாய் தாவிவிளையாடு ஆட்டுக் ...
-
ஏரைக் கொண்டு நிலம் உழுவான் எல்லோ ருக்கும் உணவ ளிப்பான் பாரை உயர்த்த உழைத்திடுவான் பட்டினி யின்றிக் காத்திடுவான் காலைக் கருக்கலில் எழுந்...
-
சீன நாட்டின் கடற்கரை சிவப்புக் கம்பளக் கடற்கரை பன்சின் நகரக் கழிமுகம் படர்ந்த அழகுக் கடற்கரை வசந்த காலம் வந்ததும் வளரும் பச்சை பாசிகள...
-
அம்மா அம்மா ஏன் அம்மா அழகிய முகத்தில் முககவசம் அத்தை மாமா வந்தாலும் அருகில் இருக்க முடியவில்லை? சும்மா இல்லை சுடர்கொடியேே சூழல் அழிந்...