Friday, August 20, 2010

விளையாடு

ஓடி ஆடி விளையாடு
உடலும் வேர்க்க விளையாடு
ஆடிப் பாடி விளையாடு
அயர்ச்சி மறையும் விளையாடு

கூடிக் களித்தே விளையாடு
கும்ப லாக விளையாடு
சோடிச் சேர்ந்தே விளையாடு
சோம்பல் விரட்டி விளையாடு

வலிமை சேர்க்கும் விளையாட்டு
வாழ்நாள் கூட்டும் விளையாட்டு
எளிமைப் பயிற்சி விளையாட்டு
ஏற்றம் கொடுக்கும் விளையாட்டு

அந்தி வானம்

அந்தி வான அழகைப் பார்
சிந்தும் காட்சி இன்பம் பார்
மேற்கில் மறையும் சூரியன் பார்
ஈர்க்கும் வான விந்தைப் பார்
மேகம் போடும் கோலம் பார்
நாகம் படம் எடுக்கும் பார்
காடும் மலையும் நகரும் பார்
ஆடும் மாடும் மேயும் பார்
தங்கம் போலே மின்னும் பார்
மங்கும் ஒளியின் மகிமைப் பார்
வெள்ளி ஆற்றின் ஓட்டம் பார்
அள்ளிப் பருக மறையும் பார்
வான வில்லின் வண்ணம் பார்
காணக் காண இன்பம் பார்
கட்டணம் இன்றிக் காண்போம் வா
மொட்டை மாடியில் முன்னே வா

குயிலே குயிலே நீ பாடு

 குயிலே குயிலே  நீ பாடு குரலோ தேன்சுவைநீ பாடு குருவி குருவி நீயாடு குதித்து குதித்து விளையாடு அணிலே அணிலேநீ ஏறு அழகாய் தாவிவிளையாடு ஆட்டுக் ...