Sunday, November 21, 2010

குடை

மரத்தைப் போலே நிழல்தருவாய்
மழையில் குளித்து ஆடிடுவாய்

கம்பிகள் கையாய் நீட்டிடுவாய்
நம்பிக்கை யோடே காத்திடுவாய்

வீட்டுக்குள் சென்றால் கைகட்டி
கூட்டுக்குள்அடங்கி முடங்கிடுவாய்

மழையும் கானல் ஆனதுவே
மழலையர் மகிழ்ச்சி போனதுவே

குடையே மழையில் நானாட
தடையாய் நீயும் இருக்காதே

உடையும் நனைந்தால் உலர்ந்திடுமே
நடையைக் கட்டு வீட்டுக்கு

வேண்டாம் கோபம் கோடையிலே
மீண்டும் வருவ1ய் காத்திடவே

Saturday, November 6, 2010

தீபாவளி


தீபங்களின் பெருநாள்
தீபாவளித் திருநாள்

காலையிலே எழுந்து
தலையில் எண்ணெய் தேய்த்து

குளித்து புத்தாடை உடுத்தி
கும்பலாக உண்டு

பட்டாசு வெடித்து
பலகாரம் கொடுத்து

கொண்டாடும் திருநாள்
எந்நாளும் கரிநாள்

தித்திக்கும் திருநாள்
எத்திக்கும் மகிழ்நாள்

குயிலே குயிலே நீ பாடு

 குயிலே குயிலே  நீ பாடு குரலோ தேன்சுவைநீ பாடு குருவி குருவி நீயாடு குதித்து குதித்து விளையாடு அணிலே அணிலேநீ ஏறு அழகாய் தாவிவிளையாடு ஆட்டுக் ...