Sunday, June 27, 2010

காடு


கூட்டமாக மான்களெல்லாம் குதித்து ஓடுது
ஆட்டம் போட்டு அழகுமயில்அன்பைக் காட்டுது
ஏட்டினிலேப் பார்த்தவுருவம் எதிரில் தெரியுது
கூட்டினிலேக் குயில்முட்டை காக்கை காக்குது

சீட்டெடுக்கும் கிளிவிடுதலை கீதம் பாடுது
மாட்டின் மீது காகம் ஏறி சவாரி போகுது
காட்டுராசா சிங்கமும்தான் முழக்கம் செய்யுது
நாட்டுமக்கள் நிலையுமிழ்ந்து நரி குதிக்குது

கூட்டமாக குரங்கெல்லாம் கிளையில் தாவுது
ஓட்டமாக ஓடிமுயலும் ஒளிந்து கொள்ளுது
காட்டுநாயும் வேட்டையாட பாய்ந்து ஓடுது
பாட்டுப்பாடி பறந்துகுயிலும் மரத்தில் மறையுது

ஆட்டுமந்தை அணிவகுத்து அழகாய் செல்லுது
காட்டுயானை வீரன்போல் நடைந டக்குது
ஈட்டியிறை விருப்பம்போல் எல்லாம் கொள்ளுது
வீட்டுப்பிள்ளை அறிந்துகொண்டால் எல்லாம் நல்லது

குயிலே குயிலே நீ பாடு

 குயிலே குயிலே  நீ பாடு குரலோ தேன்சுவைநீ பாடு குருவி குருவி நீயாடு குதித்து குதித்து விளையாடு அணிலே அணிலேநீ ஏறு அழகாய் தாவிவிளையாடு ஆட்டுக் ...