Monday, December 21, 2009

மழை வருது....


மழைவருது மழைவருது ஓடியாங்க
மண்நனைந்து மணம்வருது ஓடியாங்க

கோழிக்குஞ்சு நனைகிறதேக் கூட்டியாங்க
குளிரடிக்கும் பத்திரமாக் காத்துவையுங்க

குருவியெல்லாம் குளிக்கிறதேக் கூடவாங்க
அருவிபோல அகமகிழ ஓடியாங்க

கைகோர்த்து மழையிலாட ஓடியாங்க
வைகைந்தி தெருவிலோட ஆடவாங்க

காகிதத்தில் கப்பல்விட ஓடியாங்க
காகத்தோடுக் கபடியாட ஓடியாங்க

தவளைகளின் ஜலதரங்கம் ரசிக்க வாங்க
தண்ணீர் படுக்கையிலே குதிக்க வாங்க

நிற்பதற்குள் மழையிலாட நீங்க வாங்க
நீலவான குடைகிழிந்தது ஓடியாங்க

2 comments:

  1. அடடா இப்பவே மழையிலே நனைந்து குளித்து ஆடணும் போல இருக்கே பாலா

    ReplyDelete

குயிலே குயிலே நீ பாடு

 குயிலே குயிலே  நீ பாடு குரலோ தேன்சுவைநீ பாடு குருவி குருவி நீயாடு குதித்து குதித்து விளையாடு அணிலே அணிலேநீ ஏறு அழகாய் தாவிவிளையாடு ஆட்டுக் ...