
பாப்பா தம்பி ஓடிவா
பட்டே நீயும் ஓடிவா
அப்பா அம்மா சொல்கேட்டு
அவசியம் சுத்தம் பேணிவா
உணவு உண்ணச் செல்லுமுன்
ஒழுங்காய் கைகள் கழுவணும்
கழிவறை சென்று வந்தபின்
கழுவு கைகள் சோப்பாலே
உண்ட பின்னும் கழுவணும்
உணர்ந்தால் நன்மை உடலுக்கே
கண்ட இடத்தில் கைவைத்தால்
கிருமிகள் சேரும் அறிவாயே
கைகளில் அழுக்குச் சேர்ந்தாலோ
கட்டாயம் உடலுக்கு ஆபத்து
பையில் காசு இருந்தாலும்
பாப்பா சுத்தம் அவசியம்
அழுக்கு சேர்தல் குற்றமே
அதனால் நோய்கள் சேருமே
ஒழுக்கம் சுத்தம் பேணுதல்
உணர்ந்தால் வாழ்நாள் கூடுமே
சுத்தம் பற்றிய கவிதை அருமை பாலா அருமை
ReplyDeleteநன்றி தேனம்மை
ReplyDelete