ஓடி ஆடி விளையாடு
உடலும் வேர்க்க விளையாடு
ஆடிப் பாடி விளையாடு
அயர்ச்சி மறையும் விளையாடு
கூடிக் களித்தே விளையாடு
கும்ப லாக விளையாடு
சோடிச் சேர்ந்தே விளையாடு
சோம்பல் விரட்டி விளையாடு
வலிமை சேர்க்கும் விளையாட்டு
வாழ்நாள் கூட்டும் விளையாட்டு
எளிமைப் பயிற்சி விளையாட்டு
ஏற்றம் கொடுக்கும் விளையாட்டு
Friday, August 20, 2010
Subscribe to:
Post Comments (Atom)
குயிலே குயிலே நீ பாடு
குயிலே குயிலே நீ பாடு குரலோ தேன்சுவைநீ பாடு குருவி குருவி நீயாடு குதித்து குதித்து விளையாடு அணிலே அணிலேநீ ஏறு அழகாய் தாவிவிளையாடு ஆட்டுக் ...
-
பாப்பா தம்பி ஓடிவா பட்டே நீயும் ஓடிவா அப்பா அம்மா சொல்கேட்டு அவசியம் சுத்தம் பேணிவா உணவு உண்ணச் செல்லுமுன் ஒழுங்காய் கைகள் கழுவணும் கழிவறை ச...
-
ஆடி அசைந்து இலட்சுமி மாடு நடந்துவந்தது அப்படி இப்படி பார்த்து பார்த்து நடந்துவந்தது வீட்டு அருகில் வந்ததுமே நின்று பார்த்தது விவரம் ப...
-
மழைவருது மழைவருது ஓடியாங்க மண்நனைந்து மணம்வருது ஓடியாங்க கோழிக்குஞ்சு நனைகிறதேக் கூட்டியாங்க குளிரடிக்கும் பத்திரமாக் காத்துவையுங்க குருவியெ...
No comments:
Post a Comment