
நேராய் நிற்கும் குதிரை
நெஞ்சு நிமிர்ந்த குதிரை
சீராய் ஆட்டி விட்டால்
சீறிப் பாயும் குதிரை
நின்ற இடத்தில் ஓடும்
நெஞ்சம் மகிழ ஆடும்
தொன்று தொட்டு குழந்தை
துயர் விரட்டும் குதிரை
பாப்பா தம்பி சேர்த்து
சோக்காய் சுமக்கும் குதிரை
தோப்பும் துறவும் போகும்
தூர தேசம் போகும்
ஒரே இடத்தில் நின்றே
உலகைச் சுற்றும் குதிரை
தரையில் டக் டக் என்றே
தாளம் போட்டு ஓடும்
No comments:
Post a Comment