Saturday, January 14, 2012

உழவன்

ஏரைக் கொண்டு நிலம் உழுவான்
எல்லோ ருக்கும் உணவ ளிப்பான்
பாரை உயர்த்த உழைத்திடுவான்
பட்டினி யின்றிக் காத்திடுவான்

காலைக் கருக்கலில் எழுந்திடுவான்
கலப்பை தோளில் சுமந்திடுவான்
ஓலைக் குடிசையில் வாழ்ந்தாலும்
ஓயாமல் உழைப்பை ஈந்திடுவான்

கால்நடைக் காத்து மகிழ்ந்திடுவான்
கவலை மறந்தே வாழ்ந்திடுவான்
தோல் கருப்பாக இருந்தாலும்
தூய உள்ளம் பெற்றிருப்பான்

உழவர் உழைப்பை மதித்திடுவோம்
உண்மை அன்பால் வாழ்த்திடுவோம்
மழையைப் போலே பலன்கருதா
மான்பைப் போற்றி வணங்கிடுவோம்.

No comments:

Post a Comment

குயிலே குயிலே நீ பாடு

 குயிலே குயிலே  நீ பாடு குரலோ தேன்சுவைநீ பாடு குருவி குருவி நீயாடு குதித்து குதித்து விளையாடு அணிலே அணிலேநீ ஏறு அழகாய் தாவிவிளையாடு ஆட்டுக் ...