
குயிலின் வண்ணம் கருமை
குரலோ நல்ல இனிமை
பயிலும் பிள்ளை விரும்பும்
பாடல் என்றும் கரும்பு
தோற்றம் அழகு இல்லை
ஏற்றம் இசையின் எல்லை
மாற்றம் வேண்டி நாட்டில்
மனிதர் திருந்தக் கூவும்
உச்சிக் கிளையில் அமர்ந்து
உணர்வுத் தூண்டப் பாடும்
குச்சு வீட்டுக் குடிகளும்
கூடி மகிழப் பாடும்
கனக சுப்பு ரத்தினம்
கண்டு வியந்தக் குயிலே
மனத்தில் மாசு இல்லா
மக்கள் விரும்பும் குயிலே
after ala.vallippa like kulanthai poet, you are dazzling with your simple and superb lines
ReplyDeletewith regards
padmanabhan