Friday, February 26, 2010

தேர்வு


தேர்வு நேரம் நெருங்குது
தேவை நமக்கு கவனமே
சோர்வு நீக்கிப் படிக்கணும்
சுறுசுறுப்பாய் இருக்கணும்

கண்ட இடத்தில் சுற்றாமல்
கவனம் சிதறிப் போகாமல்
நன்றாய்ப் பாடம் படிக்கணும்
நல்ல மதிப்பெண் எடுக்கணும்

படித்தப் பாடம் மறந்ததா
பயத்தை விட்டுப் படித்திடு
அடுத்து நினைவில் நிறுத்திடு
ஆண்டுத் தேர்வை வெண்றிடு


அச்சம் தேவை இல்லையே
அனைத்தும் முயன்றால் முடியுமே
மெச்சும் படி உயரலாம்
மேன்மை பெற்று வாழலாம்

No comments:

Post a Comment

குயிலே குயிலே நீ பாடு

 குயிலே குயிலே  நீ பாடு குரலோ தேன்சுவைநீ பாடு குருவி குருவி நீயாடு குதித்து குதித்து விளையாடு அணிலே அணிலேநீ ஏறு அழகாய் தாவிவிளையாடு ஆட்டுக் ...