Tuesday, December 15, 2009

கட்டியக்காரன்


முதன் முதலாய் திரை விலக்கி
முகத்தைக் காட்டுவான்
விதவிதமாய் உடை உடுத்தி
வேடம் கட்டுவான்
கட்டியக்காரன் மக்களோடு
கலந்துப் பழகுவான்
தொட்டில் பிள்ளை மகிழவும்
ஜோக்குகள் சொல்லுவான்

வந்த வேடம் கதையறிய
விளக்கத்தைக் கேட்பான்
தந்தனத்தோம் பாட்டுப்பாடித்
தாளத்தை அடிப்பான்
எந்த வேடம் என்றாலும்
எளிதில் மாறுவான்
சொந்த மாகப் பாட்டுப்பாடி
சோகத்தைக் கலைப்பான்

சிரிப்பாலே மக்களை எல்லாம்
சிந்திக்க வைப்பான்
குறிப்பாக நாட்டு நடப்பை
கிண்டலும் செய்வான்

No comments:

Post a Comment

குயிலே குயிலே நீ பாடு

 குயிலே குயிலே  நீ பாடு குரலோ தேன்சுவைநீ பாடு குருவி குருவி நீயாடு குதித்து குதித்து விளையாடு அணிலே அணிலேநீ ஏறு அழகாய் தாவிவிளையாடு ஆட்டுக் ...