Friday, December 18, 2009

காகம்


மூக்கை முன்னால் நீட்டி
முகத்தை ஆட்டி ஆட்டி
காக்கை ஒன்று வந்தது
கழுத்தை நீட்டி அழைத்தது




அம்மா திரும்பிய வேளை
அலகால் மீனைக் கொத்த
சும்மா பறந்து வந்தது
சுற்றித் திரும்பிச் சென்றது

சோறு வைக்க அம்மா
சாலையில் வந்து நின்றாள்
பார்த்து 'கா'கா' என்றாள்
பறந்து வந்ததுக் கூட்டமாய்

இனத்தைச் சேர்த்துக் கூட்டி
இறையை உண்ணும் காக்கை
குணத்தைக் கற்றுக் கொண்டால்
குறையே இல்லை வாழ்வில்

2 comments:

  1. கா கா கா என்ற பராசக்தி பாடலை ஞாபகப்படுத்திட்டீங்க பாலா அருமையான பாட்டு

    ReplyDelete
  2. நன்றி தேனம்மை உங்கள் பாராட்டு என்னை எழுதத் தூண்டுகிறது

    ReplyDelete

குயிலே குயிலே நீ பாடு

 குயிலே குயிலே  நீ பாடு குரலோ தேன்சுவைநீ பாடு குருவி குருவி நீயாடு குதித்து குதித்து விளையாடு அணிலே அணிலேநீ ஏறு அழகாய் தாவிவிளையாடு ஆட்டுக் ...