Wednesday, December 9, 2009

பசு


சந்தைக்குப் போன அப்பா
சாயங்காலம் வந்தார்
பந்தை போட்டு நானும்
பார்க்க ஓடி வந்தேன்

கையில் பசு மாடு
கழுத்தில் மணி மாலை
பையில் காசு இல்லை
பார்க்க அழகு கொல்லை

மாதம் சில ஆனதும்
மழலைக் கன்றை ஈன்றது
கீதம் பாடி ஆடினோம்
கன்றை துரத்தி ஓடினோம்

பாலைக் கொடுத்தது பசுமாடு
பரவசம் கொடுத்தது கன்றுக்குட்டி
நாளும் மகிழ்ச்சிக் கொண்டாட்டம்
நடக்குது கன்றோடு தொடரோட்டம்

2 comments:

  1. கன்றுடன் தொடரோட்டம் நல்லா இருக்கு பாலா அருமை

    ReplyDelete

குயிலே குயிலே நீ பாடு

 குயிலே குயிலே  நீ பாடு குரலோ தேன்சுவைநீ பாடு குருவி குருவி நீயாடு குதித்து குதித்து விளையாடு அணிலே அணிலேநீ ஏறு அழகாய் தாவிவிளையாடு ஆட்டுக் ...