Thursday, January 26, 2012

பொங்கல்

புதுப்பானை வைத்திடுவோம் பொங்கலோ பொங்கல்
புத்தரிசி இட்டிடுவோம் பொங்கலோ பொங்கல்
கதிரவனை வணங்கிடுவோம் பொங்கலோ பொங்கல்
களித்து நாங்கள் மகிழ்ந்திடுவோம் பொங்கலோ பொங்கல்

மாடுகளை மதித்திடுவோம் பொங்கலோ பொங்கல்
மாக்கோலம் போட்டிடுவோம் பொங்கலோ பொங்கல்
பாடுபட்ட உழவர்களைப் பொங்கலோ பொங்கல்
பாராட்டி வாழ்த்திடுவோம் பொங்கலோ பொங்கல்

பெரியோரை வணங்கிடுவோம் பொங்கலோ பொங்கல்
பெற்றிடுவோம் ஆசிகளை பொங்கலோ பொங்கல்
வறியோர்க்கு வழங்கிடுவோம் பொங்கலோ பொங்கல்
வயல்வெளியை தொழுதிடுவோம் பொங்கலோ பொங்கல்

கரும்புண்டு களித்திடுவோம் பொங்கலோ பொங்கல்
கவலையின்றி கூடிடுவோம் பொங்கலோ பொங்கல்
பிரிவினைகள் இல்லாமல் பொங்கலோ பொங்கல்
பிறர்மகிழ சேர்ந்திடுவோம் பொங்கலோ பொங்கல்

No comments:

Post a Comment

குயிலே குயிலே நீ பாடு

 குயிலே குயிலே  நீ பாடு குரலோ தேன்சுவைநீ பாடு குருவி குருவி நீயாடு குதித்து குதித்து விளையாடு அணிலே அணிலேநீ ஏறு அழகாய் தாவிவிளையாடு ஆட்டுக் ...