Tuesday, January 17, 2012

யாழினி

அம்மா அப்பா சொல்கேட்டு
அழகாய் பள்ளிச் சென்றிடுவேன்
சும்மா சோம்பிக் குந்தாமல்
சுறுசுறுப் பாக ஆடிடுவேன்

நாளும் குறளைப் படித்திடுவேன்
நாட்டு நடப்புகள் அறிந்திடுவேன்
கேளிர் சேர்ந்தே வாழ்ந்திடுவேன்
கேள்விகள் கேட்டே தெளிந்திடுவேன்

கூண்டுக் கிளியாய் இல்லாமல்
குவலயம் சுற்றி வந்திடுவேன்
ஈன்ற தாயை வணங்கிடுவேன்
என்றும் தந்தை மதித்திடுவேன்

பாட்டும் கூத்தும் கற்றிடுவேன்
பழந்தமிழ் கலைகள் காத்திடுவேன்
வாட்டும் வறுமை சூழ்ந்தாலும்
வாழ்வில் நேர்மை கடைபிடிப்பேன்

No comments:

Post a Comment

குயிலே குயிலே நீ பாடு

 குயிலே குயிலே  நீ பாடு குரலோ தேன்சுவைநீ பாடு குருவி குருவி நீயாடு குதித்து குதித்து விளையாடு அணிலே அணிலேநீ ஏறு அழகாய் தாவிவிளையாடு ஆட்டுக் ...