Sunday, January 8, 2012

ஆலமரம்

அடி பெருத்த ஆலமரம்
அழகு விழுது ஆலமரம்
கிளை படர்ந்த ஆலமரம்
கிளிகள் கொஞ்சும் ஆலமரம்

சிறிய விதையில் பிறந்த மரம்
பெருமரமாய் வளர்ந்த மரம்
சிறுவர் ஆட நிழல் தரும்
பெரியோர் கூட இடம் தரும்

விழுதில் ஊஞ்சல் ஆடலாம்
விளையாடி நாளும் மகிழலாம்
இலையில் சோறு உண்ணலாம்
இயற்கை அழகை பருகலாம்

ஊரில் உள்ளோர் கூடும் மரம்
உழைப்பவர் ஓய்வு எடுக்கும் மரம்
பாரில் பசுமை ஆலமரம்
பாலர் போற்றிப் பாடுவோம்

No comments:

Post a Comment

குயிலே குயிலே நீ பாடு

 குயிலே குயிலே  நீ பாடு குரலோ தேன்சுவைநீ பாடு குருவி குருவி நீயாடு குதித்து குதித்து விளையாடு அணிலே அணிலேநீ ஏறு அழகாய் தாவிவிளையாடு ஆட்டுக் ...